
தலைநகர் தில்லியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு தில்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பிற்பகல் 1.19 மணிக்கு மர்ம நபரிடமிருந்து அழைப்பு வந்தது.
இதையடுத்து உள்ளூர் காவல்துறை, மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை உள்ளிட்ட குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என அறிவிக்கப்பட்டது என்று அவர்கள் மேலும் கூறினர். இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.