பாடகர் ஸுபீன் கர்க் மரண வழக்கில் எந்த சந்தேகமும் இல்லை! சிங்கப்பூர் காவல்துறை விசாரணை

பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணம் தொடர்பான வழக்கில் சந்தேகப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை - சிங்கப்பூர் காவல்துறை
ஸுபீன் கர்க்
ஸுபீன் கர்க்
Published on
Updated on
1 min read

பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணம் தொடர்பான வழக்கில் சந்தேகப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

அஸ்ஸாமை சேர்ந்த பாடகர் ஸுபீன் கர்க், கடந்த மாதம் சிங்கப்பூரில் கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான வழக்கில் இதுவரையில் சந்தேகப்படும்படியாக எதுவும் கண்டறியப்படவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. ஸுபீன் கர்க் மரணம் தொடர்பாக தவறான தகவல்கள் பரவி வருவதாகக் கூறிய காவல்துறையினர், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

அஸ்ஸாமை சேர்ந்த பாடகர் ஸுபின் கர்க் கடந்த மாதம் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். அங்குள்ள கடலில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்ததார். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஸுபின் கர்க் மரண வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக வடகிழக்கு இந்திய திருவிழா ஏற்பாட்டாளர் ஷியாம்கனு மஹந்தா, ஸுபின் கர்கின் மேலாளர் சித்தார்த் ஷர்மா ஆகிய இருவரும் அக்.1-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.

சிங்கப்பூருக்கு ஸுபின் கர்கை அழைத்துச்சென்ற காவல்துறை அதிகாரியும் அவரது உறவினருமான சந்தீபன் கர்க் அக்.8-ஆம் தேதியும், ஸுபின் கர்கின் பாதுகாவலர்கள் நந்தேஷ்வர் போரா மற்றும் பரீஷ் பைசியா ஆகியோர் அக்.10-ஆம் தேதியும் கைதுசெய்யப்பட்டனர்.

இதையும் படிக்க: கல்லூரி கழிப்பறையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! மாணவர் கைது!

Summary

'No Foul Play Suspected': Singapore Police As Probe Into Zubeen Garg's Death Continues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com