
பஞ்சாபிலிருந்து பிகார் சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சஹர்சா (பிகார்) சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் 19 ஆவது பெட்டியிலிருந்து புகை வருவதை அறிந்த பயணிகள், அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். தீ விபத்தை அறிந்த அதிகாரிகளும், தீப்பற்றிய பெட்டிகளை பிற பெட்டிகளிலிருந்து துண்டித்து விட்டனர்.
மேலும், துரிதமாகச் செயல்பட்ட பயணிகள், ரயிலினுள் இருந்து வெளியே குதித்து உயிர்த் தப்பினர். நல்வாய்ப்பாக, இந்தத் தீவிபத்தில் பயணிகள் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை. தொடர்ந்து, பயணிகள் பாதுகாப்பாக வேறொரு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த தீவிபத்தில் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து நாசமடைந்த நிலையில், தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே, ரயில் தீவிபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: துணை முதல்வர் பிரமாணப் பத்திரத்தில் குளறுபடி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.