
பிகார் பேரவைத் தேர்தலில் துணை முதல்வர் சாம்ராட் சௌதரியின் பிரமாணப் பத்திரத்தின் குறிப்புகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
பிகார் பேரவைத் தேர்தலில், தாராபூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வரும் எம்.எல்.சி.யுமான சாம்ராட் சௌதரி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், அவர் பிஎஃப்சி படித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவரின் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி குறித்து ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், பிரமாணப் பத்திரத்தில் பிஎஃப்சி (Pre-Foundation Course) என்று சாம்ராட் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, `பிஎஃப்சி தமிழ் பேசுபவர்களுக்கானது’ என்று குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், சாம்ராட்டின் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தனக்கு 56 வயது என்று பிரமாணப் பத்திரத்தில் சாம்ராட் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், 1995-ல் தாராபூர் படுகொலை வழக்கின்போது, தன்னை மைனர் என்று சாம்ராட் குறிப்பிட்டார்.
ஆனால், தற்போது தனக்கு 56 வயது என்று சொல்வதாக பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி, தாராபூர் படுகொலை வழக்கில் சாம்ராட்டுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதா? அல்லது வழக்கு முடித்துவைக்கப் பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க: இந்தியாவுடன் ஆப்கன் சதித் திட்டம்! பாக். அமைச்சர் குற்றச்சாட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.