
ஆப்கானிஸ்தானுடன் அனைத்து உறவு சகாப்தமும் முடிவடைந்து விட்டதாக பாக். அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போர்ச் சூழலுக்கு மத்தியில், தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியிருக்கும் ஆப்கானிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று பாக். அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ``பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும், அவர்களின் சொந்த மண்ணுக்கே திரும்ப வேண்டும். எங்களின் நிலமும் வளமும், 250 மில்லியன் பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம். ஆப்கனுடன் முன்பிருந்த உறவைப்போல இனி தொடர முடியாது.
இனி எதிர்ப்புக் குறிப்போ அமைதிக்கான முறையீடோ இருக்காது. எங்களின் பிரதிநிதிகளும் ஆப்கன் செல்ல மாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.
இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டும் ஆப்கானிஸ்தானியர்கள், ஒரு காலத்தில் நமது நிலத்தில், நமது பாதுகாப்பில் இருந்தனர். இருப்பினும், பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் தரவில்லை’’ என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, எல்லை இந்தியா அத்துமீற வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்கான பதில் உத்திகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூறிய கவாஜா, இருமுனைப் போருக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.