
நகைச்சுவை நடிகரும் யூடியூபருமான சமய் ரெய்னா தீபாவளியையொட்டி ரூ. 1.3 கோடி மதிப்புடைய சொகுசுக் காரை தனக்குத் தானே பரிசளித்துக்கொண்டார்.
ஆமிர் கார், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் போன்ற பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே வைத்துள்ள இந்த சொகுசுக் காரை யூடியூபர் ஒருவர் வாங்கியுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜம்முவை பிறப்பிடமாகக் கொண்ட சமய் ரெய்னா, மகாராஷ்டிரத்தின் புணேவில் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார். திறந்தவெளி நிகழ்ச்சித் தொகுப்பாளராக அவ்வபோது பணிபுரிந்து வந்த ரெய்னா, தனது தனித்துவமான நகைச்சுவை திறனால் பார்வையாளர்களை தக்கவைக்கும் வசீகரம் கொண்டவர்.
பிரபல நகைச்சுவை நடிகரான அனிர்பான் தேஷ்குப்தா போன்றோரின் வழிகாட்டுதலின்படி மும்பையில் நடைபெற்ற இந்தியா காட் டேலன்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் கவனத்தை ஈர்த்தார்.
கரோனா பொதுமுடக்கத்தின்போது பொதுநிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், சொந்தமாக யூடியூப் மூலம் நகைச்சுவை விடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் கிடைத்த வரவேற்பை அடுத்து, தொடர்ந்து விடியோக்களை பதிவிட்டுவந்துள்ளார். பிரபல ஓடிடி தளங்களிலும் இவரின் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
தற்போது, இவரின் யூடியூப் தளத்தில் 7.42 மில்லியன் நபர்கள் பின்தொடர்கின்றனர். தற்போது தீபாவளியையொட்டி தனக்குத் தானே ரூ. 1.3 கோடி மதிப்புடைய டொயோட்டா வெல்ஃபையர் என்ற சொகுசுக் காரை பரிசளித்துள்ளார்.
பாலிவுட்டில் இதுவரை கியாரா அத்வானி, கீர்த்தி சனோன், ஆமிர் கார், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் மற்றும் ஃபகத் ஃபாசில் மட்டுமே இந்தக் காரை வைத்துள்ளனர்.
பாலிவுட் பிரபலங்களால் மட்டுமே வாங்கி அதனை பராமரிக்கும் திறன் இருந்துவந்த நிலையில், தற்போது யூடியூபர் ஒருவர் அத்தகைய சொகுசுக் காரை வாங்கியுள்ளதால், பாலிவுட்டில் அனைவரின் கவனமும் சமய் ரெய்னாவின் பக்கம் திரும்பியுள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிகார் தேர்தல்: 25 வேட்பாளர்களை களமிறக்கிய அசாதுதீன் ஓவைசி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.