
ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
செனாப் நதியில் அமைந்துள்ள அக்னூர் பகுதியில் விளக்குகளை ஏற்றியும் இனிப்புகளைப் பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வாழ்த்துகளை பரிமாற்றிக்கொண்டனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள நிலையில் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதியிலேயே தீபாவளியைக் கொண்டாடினர்.
தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள வேலியில் தீபங்களை ஏற்று அண்டை நாட்டுடன் தீப ஒளியைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிக்க | ஆமிர் கான், அக்ஷய் குமார் வாங்கிய காரை பரிசளித்துக்கொண்ட யூடியூபர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.