
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (அக். 21) கேரள மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்.21 முதல் அக்.24 ஆம் தேதி வரையில் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக, கேரள மாநிலத்துக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், இன்று மாலை திருவனந்தபுரம் செல்லும் குடியரசுத் தலைவர் முர்மு, அக்.22 ஆம் தேதி சபரிமலை கோயிலில் தரிசனம் செய்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, அக்.23 ஆம் தேதி கேரள ஆளுநர் மாளிகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் சிலையை அவர் திறந்து வைக்கின்றார். மேலும், கோட்டயத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கின்றார்.
பின்னர், அக்.24 ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள செயிண்ட் தெரசா கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கர்நாடக அரசு தடை செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.