கேரளத்தில் தொடரும் கனமழை! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கேரளத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து...
கேரளத்தில் தொடர் கனமழை (கோப்புப் படம்)
கேரளத்தில் தொடர் கனமழை (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

கேரள மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், 10 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளத்தில், தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், இரு மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கேரளத்தின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு, இன்று (அக். 22) இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில், இடுக்கி, பாலக்காடு மற்றும் மலப்புறம் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கெனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆரஞ்ச் எச்சரிக்கையாகத் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், காசர்கோடு, கண்ணூர், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகார் தேர்தல்: தேஜஸ்வி முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ் பதில் அளிக்க மறுப்பு

Summary

The IMD has issued an Orange Alert for 10 districts in Kerala due to continuous heavy rains.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com