பிகார் தேர்தல்: தேஜஸ்வி முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ் பதில் அளிக்க மறுப்பு

பிகார் தேர்தலையொட்டி லாலு பிரசாத் யாதவ் உடன் அசோக் கெலாட் சந்தித்தது குறித்து...
லாலு பிரசாத் யாதவ் வீட்டில் அசோக் கெலாட்
லாலு பிரசாத் யாதவ் வீட்டில் அசோக் கெலாட்பிடிஐ
Updated on
1 min read

பிகார் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் நிலவும் சிக்கல் சரி செய்யப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

எனினும், பிகார் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் முன்னிருத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துள்ளார்.

பிகாருக்கு சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 12 ஆகிய இரு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை கட்சிகள் அறிவித்து வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளன.

ஆனால், இந்தியா கூட்டணியில் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஒருசில தொகுதிகளில் கூட்டணி கட்சியினரே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவை காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் இன்று சந்தித்தார்.

பிகாரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிகள் மேற்பார்வையாளராக அசோக் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நிலவும் பிரச்னைகளை சரி செய்யும் நோக்கத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுடன் அசோக் கெலாட் பேசியதாவது,

மகாராஷ்டிரத்தில் பாஜக சதியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது எதிர்க்கட்சி கூட்டணிக்கு மிகவும் முக்கியமானது. கூட்டணியில் நிலவும் பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.

எனினும், பிகார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் அளிக்க மறுத்துள்ளார்.

இதையும் படிக்க | நேபாள கல்வி நிலையங்களுக்கு 81 பேருந்துகள் வழங்கிய இந்தியா!

Summary

Bihar Assembly election Gehlot meets Lalu amidst seat-sharing row

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com