
வளங்கள் நிறைந்த பிகார் என்ற புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கான தேர்தல் இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், எனது வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி என்ற பிரசாரத்தின் மூலம் களப்பணியாற்றும் கட்சித் தொண்டர்களுடன் பிரதமர் மோடி இன்று (அக். 23) உரையாற்றினார்.
தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது,
''நிலைத்தன்மை, மேம்பாடு, மற்றும் அமைதி ஆகியவையே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம். ஆனால், மகாபந்தன் எனக் கூறிக்கொள்ளும் சிலர் அதற்கு எதிர்மாறாகவே நடந்துகொள்கின்றனர்.
அதனால்தான் பிகாரின் ஒவ்வொரு துடிப்பான இளைஞரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி வர விரும்புகின்றனர். சாத் பண்டிகையுடன் ஜனநாயகத் திருவிழாவையும் மக்கள் கொண்டாட வேண்டும். சாத் பண்டிகை வழிபாட்டிற்குத் தேவையான பணிகள் மக்களிடையே முழு வீச்சில் நடந்து வருகிறது. அதேவேளையில் ஜனநாயகத் திருவிழாவையும் பிகார் மக்கள் கொண்டாடவுள்ளனர்.
வளத்தை நோக்கிய பிகாருக்கு புதிய அத்தியாயத்தை எழுதும் தேர்தல் இது. பிகார் இளைஞர்கள் இந்தத் தேர்தலில் மிகமுக்கியப் பங்காற்றுவார்கள். ஜங்கிள் ராஜ் ஆட்சியை மக்கள் மீண்டும் அனுமதிக்கமாட்டார்கள்.
பிகார் சாணக்கிய மண். எதையும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். பிகாரின் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தங்கள் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு மூத்த குடிமக்களையும் வாக்களிக்க அழைத்து வர வேண்டும். வாக்கு செலுத்த அவர்களை வற்புறுத்த வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சமூக வலைத்தள விடியோவில் ஏஐ மூலம் குரலை காப்பி எடுத்து மோசடி! தப்புவது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.