

சத்தீஸ்கரில் விவசாயி ஒருவர் ரூ.40 ஆயிரம் வரை நாணயங்களாக சேமித்து தனது ஆசை மகளுக்கு இருசக்கர வாகனத்தை பரிசளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள கேசரபத் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பஜ்ரங் ராம் பகத். இவருடைய மகள் சம்பா. பஜ்ரங் ராம் தன்னுடைய மகளுக்கு இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கிக்கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். இதற்காக அவர் கடந்த ஆறு மாதங்களாக சிறுக, சிறுக பணம் சேமித்து வந்துள்ளார். அதுவும் அனைத்தும் நாணயங்களாக சேமித்திருக்கிறார்.
பிறகு தீபாவளியொட்டி தான் சேமித்து வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு ஷோரூமிற்கு சென்றுள்ளார். அங்கு இருசக்கர வாகனம் வந்திருப்பதாக ஊழியர்களிடம் கூறி பையில் இருந்த நாணயங்களை அவர் காண்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பிறகு அந்த விவசாயிக்கு நாணயங்களை எண்ணுவதில் அவர்களும் உதவியுள்ளனர். ஷோரூமில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சிரமமின்றி நாணயங்கள் எண்ணப்பட்டன.
அதில், பஜ்ரங் ராம் ரூ.40,000 வரை நாணயங்களாக சேமித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருசக்கர வாகனத்தின் மொத்த விலை 98,700. மீதமுள்ள தொகையை விவசாயி பஜ்ரங் ராம் ரொக்கமாக செலுத்தியிருக்கிறார். கூடவே விவசாயின் குடும்பத்தினருக்கு பண்டிகை கால பரிசாக மிக்ஸியும் வழங்கப்பட்டது. பி.காம் மாணவி சம்பா, இருசக்கர வாகனம் தனது அன்றாட பணிக்கு உதவும் என்று கூறினார்.
இந்த விடியோ ஆன்லைனில் வைரலாகி ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளன. நெட்டிசன்கள் பலர் தந்தையின் அர்ப்பணிப்பு மற்றும் பாசத்தைப் பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.