

பைசன் திரைப்படத்துக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
மேலும், இப்படத்துக்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பைசன் படம் உலகளவில் தமிழ் மொழியில் மட்டும் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்தப் படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், பைசன் திரைப்படத்தைப் பாராட்டி இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ளார். அதில், “பரியேறும் பெருமாளுக்கு பிறகு மாரி செல்வராஜின் ஆகச்சிறந்த படைப்பு பைசன்.
நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் வரவழைத்தது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 'பைசன்' படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.