

த்ருவ் விக்ரம் நடிப்பில் வரவேற்பை பெற்றுள்ள 'பைசன்' படத்தை இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பைசன் - உறுதியையும் எதிர்ப்பையும் பிரதிபலிக்கும் ஆழமான தியானம்.
த்ருவ் விக்ரம் அளிக்கும் இயல்பான, மறக்க முடியாத நடிப்பு சக்திவாய்ந்த உவமைகளால் நிறைந்துள்ளது.
வலிமை மற்றும் உயிர்வாழ்வின் அடையாளமாக பைசனின் எலும்புக்கூடு, மரியாதைக்கான போராட்டமாக கபடி, தடங்களால் மறைக்கப்பட்ட பாதைகளில் ஓடும் பயணம் - அனைத்தும் இடையறாத போராட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
அமைதியானாலும் வெடிக்கும் பைசன், கிட்டனின் அடக்கி வைத்த கோபத்தை பிரதிபலிக்கிறது;
கருப்பு-வெள்ளை மற்றும் நிறம் மாறும் காட்சிகள் இழப்பு, நினைவு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் உள்பட பல்வேறு தரப்பினர் படத்தை பாராட்டியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனும் பாராட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.