

தில்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
துவாரகாவின் செக்டார் 16 இல் உள்ள சிஆர்பிஎப் பள்ளிக்கு காலை 8.15 மணிக்குக்கும், தொடர்ந்து நங்லோயில் உள்ள பள்ளிக்கு காலை 8.20 மணிக்கும், பின்னர் கோய்லா டெய்ரி பகுதியில் உள்ள பள்ளிக்கு காலை 8.51 மணிக்கும் நான்காவது மிரட்டல் பிரசாத் நகரில் உள்ள பள்ளிக்கு காலை 10.33 மணிக்கும் வந்தன.
இதனால் அதிகாரிகள் உடனடியாக வளாகத்தை காலி செய்து முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து வளாகங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டன. ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை.
சோதனைக்குப் பிறகு மிரட்டல்கள் வெறும் புரளி என அறிவிக்கப்பட்டன என்று தெரிவித்தார். இதனிடையே மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் கண்டறிய மின்னஞ்சல்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.