

ஜம்மு-காஷ்மீரில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி மூன்று இடங்களை வென்றுள்ளது.
அக்கட்சியின் சார்பில் சௌத்ரி முகமது ரம்ஜான், சஜாத் கிச்லூ, ஷம்மி ஓபராய் ஆகியோர் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியானபாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. பாஜக செய்தித் தொடர்பாளர் 32 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அந்த இடத்திற்கான தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் இம்ரான் நபி டார் 22 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். ஜம்மு-காஷ்மீரில் இருந்து நான்கு மாநிலங்களவை எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டிருந்தது.
அம்மாநில சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள 88 எம்எல்ஏக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் நான்கு மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு பாஜக சார்பில் வேட்பாளர்கள் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.