

உ.பி. மாநிலம், ஆக்ராவில் வேகமாக சென்ற கார் சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 5 பேர் பலியானதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
போலீஸ உதவி ஆணையர் சேஷ் மணி உபாத்யாய் கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஐந்து பேரும் பலியானதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
பலியானவர்கள் பாப்லி (33), பானு பிரதாப் (25), கமல் (23), கிரிஷ் (20), மற்றும் பந்தேஷ் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாக்லா புதிக்கு அருகிலுள்ள நியூ ஆக்ரா காவல் நிலையப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்துக்குள்ளான ஓட்டுநர் ஆக்ராவைச் சேர்ந்த அன்ஷு குப்தா (40) என போலீஸ் வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளனர். குப்தா நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார்.
விபத்து நடந்தபோது அன்ஷு குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறுகையில், கார் வேகமாகச் சென்று சாலை தடுப்பு சுவரில் மோதி, பின்னர் சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
விபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஐந்து பேர் பலியாகினர். ராகுல் மற்றும் கோலு என இருவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.