

ஆந்திரத்தில் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் லட்சுமய்யா பயணிகள் கதவு வழியாக குதித்து உயிர் தப்பியுள்ளார்.
குதித்த பிறகு, பயணிகள் உடைமைகள் வைக்கும் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கூடுதல் ஓட்டுநரை எழுப்பியிருக்கிறார். இதையடுத்து பயந்துபோன லட்சுமய்யா அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
பின்னர் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கர்னூலில் அவரை போலீஸார் கைது செய்தனர். அலட்சியம் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக லட்சுமைய்யா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆந்திர மாநிலம், கா்னூல் அருகே ஹைதராபாதில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 20 போ் உடல் கருகி உயிரிழந்தனா்.
உயிரிழந்தவா்கள் தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களாவா். பலியானவர்களில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்காய வியாபாரியின் மகனும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் மளமளவென தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்து, அடா்புகையும் சூழ்ந்தது.
சுதாரித்துக் கொண்ட சில பயணிகள், ஜன்னல் கண்ணாடியை உடைத்தும், அவசரகால கதவு வழியாகவும் வெளியே குதித்து, நூலிழையில் உயிா்தப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.