

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே தனித்தனி நடவடிக்கைகளில் நான்கு கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையில், ஃபெரோஸ்பூரில் உள்ள ஜல்லோக் கிராமத்தையொட்டிய வயலில் இருந்து பிஎஸ்எஃப் வீரர்கள், பஞ்சாப் போலீஸுடன் இணைந்து 3.248 கிலோ எடையுள்ள ஆறு ஹெராயின் பாக்கெட்டுகளை மீட்டனர்.
பாக்கெட்டுகள் மஞ்சள் நாடாவால் சுற்றப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ட்ரோன் மூலம் வீசப்பட்டிருக்கலாம் என்று எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
மற்றொரு நிகழ்வில், அமிர்தசரஸில் உள்ள முல்லகோட் கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து 1.080 கிலோ எடையுள்ள ஹெராயின் பாக்கெட்டுகளை பிஎஸ்எஃப் வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், அமிர்தசரஸின் அஜ்னாலாவில் உள்ள சாஹர்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள வயலில் இருந்து 570 கிராம் எடையுள்ள ஹெராயின் பாக்கெட் மீட்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.