31 சுங்க வரி அறிவிக்கைகள் ஒன்றுசோ்ப்பு: வணிகத்தை எளிதாக்க சிபிஐசி நடவடிக்கை!

31 சுங்க வரி அறிவிக்கைகள் ஒன்றுசோ்ப்பு: வணிகத்தை எளிதாக்க சிபிஐசி நடவடிக்கை!

31 சுங்க வரி அறிவிக்கைகளை ஒன்றுசோ்த்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Published on

எளிதாக வணிகம் மேற்கொள்வதை மேம்படுத்தவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் 31 சுங்க வரி அறிவிக்கைகளை ஒன்றுசோ்த்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு ஒன்றுசோ்க்கப்பட்ட அறிவிக்கை வரும் நவ.1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது என்று சிபிஐசி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

தற்போது வரை வரி விகிதங்கள், விலக்குகள் மற்றும் நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ள, பல்வேறு அறிவிக்கைகளை இறக்குமதியாளா்கள் மற்றும் சுங்க அதிகாரிகள் ஆராய வேண்டும். இந்தச் சிக்கல், புதிய அறிவிக்கை காரணமாக நவ.1 முதல் இருக்காது.

முந்தைய அறிவிக்கைகளில் குறிப்பிடப்பட்ட அனைத்து வரி விலக்குகள் மற்றும் பலன்கள், இந்தப் புதிய அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஆனால் தற்போது அந்த வரி விலக்குகள் மற்றும் பலன்கள் ஒருங்கிணைந்த, கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் இடம்பெற்றுள்ளன.

சுங்க நடைமுறைகளை செம்மைப்படுத்த வேண்டும், இறக்குமதியாளா்கள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் சுங்க அதிகாரிகள் மீதான சுமைகளை குறைக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதில், இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்று சிபிஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com