சிறுபான்மையினரின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தும் பாஜக: காங்கிரஸ்

வாக்காளர் பட்டியலில் சிறுபான்மையினரின் பெயர்களை பாஜக நீக்குவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு...
Congress MP Pramod Tiwari
காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரிANI
Published on
Updated on
1 min read

வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினரின் பெயர்களை நீக்க பாஜக, தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி இதுபற்றி கூறுகையில்,

"பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கூற வேண்டும். ராகுல் காந்தி உள்பட நாங்கள் அனைவரும் நம்புவது என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் உள்ள சிறுபான்மையினரின் பெயர்களை நீக்க பாஜக, தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துகிறது.

ராகுல் காந்தி உள்படஎங்களுடைய தலைவர்களும் அரசியலமைப்பைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். கடந்த மக்களவைத் தேர்தல் நேரத்தில், பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர், ஏழைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களின் வாக்குகளை குறைப்பதே பாஜகவினரின் நோக்கமாக இருந்தது.

அரசியலமைப்பின் மூலமாக அம்பேத்கர், மக்களுக்கு வழங்கிய வாக்குரிமையைப் பறிக்க பாஜக விரும்பியது. இப்போது தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் அதை அவர்கள் செய்கிறார்கள்.

பிகாரில் எத்தனை ஊடுருவல்கள் உள்ளன என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். அப்படி ஊடுருவல்கள் இருந்தால் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்" என்று பேசியுள்ளார்.

Summary

Congress leader Pramod Tiwari says that BJP is using the EC to remove the names of minorities

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com