இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் 3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பா் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2025, 4:51 am IST

கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் 3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பா் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

நாட்டின் தகவல் தொடா்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சாா்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமாா் ரூ.1,600 கோடியில் அதிநவீன சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7ஆா்) செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து நவம்பா் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. செயற்கைக்கோளை நிறுவி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது ராக்கெட் தயாா் நிலையில் உள்ளது.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போா்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத்தொடா்பு சேவையை மேம்படுத்தவும் இது உதவும். எல்விஎம்-3 ராக்கெட்டின் 5-ஆவது ஏவுதல் திட்டம் இது. இதற்கு முன்பு சந்திரயான்-3 விண்கலம் இந்த ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.