சிறப்பு தீவிர திருத்தம்! எதிர்க்கட்சிகளின் அடுத்த நகர்வு என்ன?

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம்! எதிர்க்கட்சிகளின் அடுத்த நகர்வு என்ன?
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையம் இன்று (அக். 27) அறிவித்தது.

இதனையடுத்து, சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பு தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் மாலை 6 மணி முதல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தமிழ்நாட்டின் வாக்குரிமையைப் பாதுகாக்க என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பயிற்சிக் கூட்டம் நடத்தப்படும் என்றும் திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்த திமுக-வின் எக்ஸ் பதிவில், ``இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்­படை உரி­மை­களில் ஒன்று வாக்­கு­ரி­மை­; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்­தி­யத் தலை­மைத் தேர்தல் ஆணை­யம் மூலம் எஸ்ஐஆர் எனப்­ப­டும் சிறப்­புத் தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தத்தை கையில் எடுத்திருக்கிறது, ஒன்றிய பாஜக அரசு.

பிகார் மாநி­லத்­தில் ஏறத்­தாழ 65 லட்­சத்­திற்­கும் அதி­க­மான மக்களின் வாக்­கு­ரி­மையை எஸ்ஐஆர் மூலம் நீக்கிய தேர்தல் ஆணை­யம், தற்போது அதனை தமிழ்­நாட்­டிலும் நடைமுறைப்படுத்தப் போவ­தா­க அறி­வித்­துள்­ளது.

ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் திமுக-வுக்கு என்றும் உண்டு.

எனவே, எஸ்ஐஆர் எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட - ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட - என்­னென்ன பணி­களை மேற்­கொள்ள வேண்­டும், அவற்றை எப்­படி மேற்­கொள்ள வேண்­டும், கழ­கத் தலைமை முதல் கடைக்­கோ­டி­யில் உள்ள தொண்­டர் வரை அனை­வ­ரை­யும் ஒருங்­கி­ணைத்­துச் செயல்­ப­டு­வது எப்­படி என்­பது உள்­ளிட்ட அனைத்­தை­யும் விவா­தித்து, அவற்­றைக் களத்­தில் செயல்படுத்துவதற்காக நாளை (அக். 10) காலை 9 மணியளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் கழகத் தலைவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மக்களின் வாக்குரிமையைக் காப்போம் - எதேச்சதிகாரத்தில் இருந்து தமிழ்நாட்டைக் காப்போம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தகுதியான வாக்காளர்களின் பெயர்களை நீக்கினால், போராட்டங்கள் நடத்தப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை

Summary

Special Intensive Revision! What is the next move of the opposition parties?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com