

ரயில்களில் முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அறிவித்துள்ளது. இந்த விதிமுறை இன்று (அக் 28) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி செயலியைப் பயன்படுத்துவோருக்கு அறிவிக்கை மூலம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் ஆதார் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே வழங்கி சேமித்து வைக்க வேண்டும்.
விடுமுறை நாள்களைக் கொண்டாட சொந்த ஊர் செல்வோர் மற்றும் பண்டிகை நாள்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு முன்கூட்டியே தொடங்கும். சில நிமிடங்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும். இதனால், பல தொழில்நுட்ப பிரச்னைகளில் சிக்காமல் டிக்கெட்டை முன்பதிவு செய்வதில் பயனர்கள் பலரும் கவனம் செலுத்தி வருவார்கள்.
அந்தவகையில் தற்போது ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | இந்திய ரயில்வேயின் முதல் தனியார் ரயில் சேவை! டிக்கெட் விலை உள்ளிட்ட முழு விவரம்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.