

மகாராஷ்டிரத்தில் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஜுபைர் ஹேங்கர்கேகர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மகராஷ்டிர மாநிலம், புணேவில் மென்பொறியாளராக இருந்துவந்த ஜுபைர் ஹேங்கர்கேகர் (35) என்பவர், தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்பட்டு, கடந்த ஒருமாத காலமாக பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் (ATS) கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், அவர் பாகிஸ்தானின் அல் கொய்தா போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், இளைஞர்களை தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டியதும் தெரிய வந்தது.
மேலும், இவர் மகாராஷ்டிரம் மற்றும் பிற மாநிலங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதும் தெரிய வந்தது. இளைஞர்களை தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஜுபைர் பயன்படுத்திய பொருள்களும் அவரது இருப்பிடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது.
முன்னதாக, ஜுபைரும் அவரது நண்பரும் சென்னை வந்து சென்றுள்ளனர். இதுகுறித்த விசாரணையில், இருவரும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததாகக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, இவரை கைது செய்த பயங்கரவாதத் தடுப்புக் குழுவால் கைது செய்யப்பட்டு, உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து, ஜுபைரை நவ. 4 ஆம் தேதிவரையில் போலீஸ் காவலுக்கு அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க: அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.