

சத்தீஸ்கரில், 51 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (அக். 29) சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரின், பிஜப்பூர் மாவட்டத்தில் கூட்டாக ரூ.66 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 9 பெண்கள் மற்றும் 42 ஆண்கள் என மொத்த 51 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
இந்தக் குழுவில், தலா ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட புத்ராம் போதம் (எ) ரஞ்சித், மன்கி கொவாசி, ஹுங்கி சோதி மற்றும் ரவிந்திரா புனெம் உள்ளிட்ட மாவோயிஸ்ட் மூத்த தளபதிகளும் சரணடைந்துள்ளனர்.
இதுபற்றி, காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், சரணடையும் மாவோயிஸ்டுகளின் மறுவாழ்விற்காக அரசு அறிவித்துள்ள திட்டங்களினால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிஜப்பூரில் 2025 ஆம் ஆண்டு மட்டும் 461 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மேலும், 138 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கேஒய்சி மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.