

வங்கிப் பணி உள்ளிட்ட பல வேலைகளை இருந்த இடத்திலிருந்தே மேற்கொள்ளும் வகையில் டிஜிட்டல் சேவை வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில், மோசடியாளர்களும் இருந்த இடத்திலிருந்தே கைவரிசையைக் காட்டி வருகிறார்கள்.
டிஜிட்டல் மோசடிகள் தொடங்கிய நாளிலிருந்து வெளியாவது கேஒய்சி முறைகேடுதான். அதிலிருந்து தப்புவது எப்படி என்பதை மக்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
ஆன்லைன் கேஒய்சி முறைகேடு
ஒரு சேவை அமைப்பானது அதன் வாடிக்கையாளரை அடையாளம் கண்டு உறுதி செய்வதே உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் என்ற கேஒய்சியாகும்.
வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆன்லைன் சேவை வழங்கும் நிறுவனங்கள் என அனைத்தும் இதை மேற்கொள்ளும். ஆனால், இதே முறையை மோசடியாளர்களும் பயன்படுத்திக் கொண்டு அப்பாவி மக்களின் தனிப்பட்ட மற்றும் ரகிசயம் காக்கப்பட வேண்டிய தகவல்களைப் பெற்று மோசடி செய்கிறார்கள்.
போலி இணையதளம்
வங்கி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் பெயர்களில் போலியாக இணையதளம் உருவாக்கி, அதன் லிங்குகள் மக்களுக்கு அனுப்பி, கேஒய்சி பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறுவார்கள். அதில் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும்.
யாராவது, இதனை உண்மை என நம்பி பூர்த்தி செய்து கொடுத்தால், அந்தத் தகவலைப் பயன்படுத்தி, அவர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்துவிடுவார்கள்.
மின்னஞ்சல் முகவரியை சோதியுங்கள்
குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வழியாகவே கேஒய்சி விண்ணப்பங்களை மோசடியாளர்கள் அனுப்புவார்கள் என்பதால் அவை உண்மையானவையா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இரண்டு அடுக்குப் பாதுகாப்பு
வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றுக்கு இரண்டு அடுக்குப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துங்கள்.
மேலும் சிலரோ வெறும் தனிப்பட்ட பெயர், செல்போன் எண் உள்ளிட்டவற்றைக் கொண்டு என்ன செய்துவிட முடியும் என்று எளிதாகக் கருதுகிறார்கள். ஆனால் மோசடியாளர்களிடம் ஒருவருடைய குறிப்பிட்ட சில தகவல்கள் கிடைத்தாலே போதும், அதை வைத்து புதிய திட்டம் வகுத்துவிடுவார்கள். எனவே கவனம்.
இதையும் படிக்க.. மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை! தமிழக அரசு அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.