

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (அக். 29) பிரசாரம் செய்யவுள்ளார்.
ராகுல் காந்தியுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
பிகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்து வருகின்றன. இந்தியா கூட்டணி சார்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தேர்தலையொட்டி பிகார் மக்களுக்கான இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகளை தேஜஸ்வி யாதவ் நேற்று வெளியிட்டார்.
பிகாரில் சாத் பண்டிகைக்குப் பிறகு காங்கிரஸ் பிரசாரம் தொடங்கப்படும் என முன்பு அறிவிக்கபப்ட்டிருந்தது. இதன்படி, ராகுல் காந்தி இன்று பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார். தேஜஸ்வி யாதவ்வும் பிரசாரத்தில் உடன் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் செய்துள்ளது.
இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தி, பாஜகவின் கடந்த கால ஆட்சியில் மக்களுக்கு நடந்த வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பிரசாரத்தில் பேச ராகுல் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | விமானத்தில் சக பயணிகளை முள்கரண்டியால் குத்திய இந்தியா் கைது- நடுவானில் பரபரப்பு சம்பவம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.