

மோந்தா தீவிர புயலாக நேற்றிரவு கரையைக் கடந்த நிலையில், மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக வலுப்பெற்ற மோந்தா புயல் ஆந்திரத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை இரவு கரையைக் கடந்தது.
வானிலை அமைப்பு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகப் பலவீனமடைவதால் தெற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்கு 24 பர்கானாஸ், பூர்பா மற்றும் படஸசிம் மேதினிபூர், ஜார்கிரா ஆகிய பகுதிகளில் இன்று 7 முதல் 11 செ.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பிர்பும், முர்ஷிதாபாத, பூர்பா பர்தாமன் மற்றும் புருலியா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு வங்கான மாவட்டங்களான டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி, கூச்பெஹார் மற்றும் அலிப்பூர்துவார் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை (7 முதல் 20 செ.மீ) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மால்டா, உத்தர் மற்றும் தக்ஷின் தினாஜ்பூர் உள்ளிட்ட வடக்கு வங்காள மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு வங்க கடற்கரையோரத்திலும் அதற்கு அப்பாலும் மீனவர்கள் வியாழக்கிழமை வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: தேஜஸ்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.