

பிகாரில் 5 கட்சிகளின் வலுவான கூட்டணி அமைந்திருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பிகாரின் தர்பங்காவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பிகாரில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சியமைத்தால், மத்திய அரசு தடைசெய்த தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு (PFI) சிறையில் இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பிகார் பேரவைத் தேர்தலில் பல இளைஞர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்கிறது. ஆனால், லாலு பிரசாத் தனது மகன் தேஜஸ்வியை பிகார் முதல்வராக்க விரும்புகிறார். சோனியா காந்தி தனது மகன் ராகுலை பிரதமராக்க விரும்புகிறார். ஆனால், அந்த இரண்டு பதவிகளும் காலியாக இல்லை என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
பாட்னாவில் மத்திய அரசு தடைசெய்த தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) தீவிரமாக இருந்தனர். இருப்பினும், நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளால், அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பிஎஃப்ஐ அமைப்பு சிறையில் இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, சமஸ்திபூரில் மற்றொரு பிரசாரத்தில் அவர் பேசுகையில், ``பிகார் தேர்தல்கள், ஜங்கிள் ராஜ் திரும்புவதைத் தடுக்கும் தேர்தலாகும். மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பஞ்ச பாண்டவர்கள் போன்றது - ஐந்து கட்சிகளின் வலுவான கூட்டணி.
இந்தியா கூட்டணி முறியடிக்கப்பட்டு, இந்த முறை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்த பிறகு நாங்கள் அரசை அமைப்போம்.
முன்னாள் முதல்வர் ஜன்னாயக் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி வழங்கினார். ஆனால், அவரிடமிருந்து பட்டத்தை பறிக்க எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
லாலு பிரசாத்தும் ராப்ரி தேவியும் பிகாரின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. அவர்களால் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் நலனைப் பற்றி சிந்திக்க முடியாது.
மத்திய அரசு 8.52 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாகவும், 125 யூனிட் இலவச மின்சாரத்தை வீட்டு நுகர்வோருக்கு வழங்குகிறது.
தர்பங்காவுக்கு விரைவில் மெட்ரோ ரயில் கிடைக்கும். ஒரு விமான நிலையம் ஏற்கனவே கட்டப்பட்டு, எய்ம்ஸ் கட்டப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: வாக்குகளுக்காக பிரதமர் மோடி மேடையில் நடனமும் ஆடுவார்: ராகுல் விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.