

வாக்குகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மேடையில் நடனமும் ஆடுவார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிகார் மாநிலத்தின் முசாபர்பூரில் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசுகையில் ``பிகாரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் அரசு இயங்குகிறது என்று தேஜஸ்வி யாதவ் கூறியதை உடன்படுகிறேன். அவர்கள் நிதிஷ் குமாரின் முகத்தை பயன்படுத்துகிறார்கள்.
இரண்டு இந்தியா-க்கள் உருவாகி வருகின்றன. ஒன்று - சாமானிய மக்களுக்கானது; மற்றொன்று - 5 முதல் 10 பில்லியனர்களுக்குச் சொந்தமானது. இதனால்தான், பிகார் போன்ற இடங்கள் வறுமையில் வாடுகின்றன. அவற்றின் பரந்த திறனும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.
சாத் பூஜையை முன்னிட்டு யமுனை நதியில் நீராடுவதாக பிரதமர் மோடி அறிவித்த நாடகத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், இது குழாய் நீர் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நீர்நிலை என்று வெளிச்சத்திற்கு வந்தபோது, மோடி தடுமாறினார்.
அவர்கள் மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் வாக்குகளைத் திருடியுள்ளனர். பிகாரிலும் அதையே செய்ய முயற்சிக்கின்றனர்.
வாக்குத் திருட்டு என்பது அம்பேத்கரின் அரசியலமைப்பு மீதான தாக்குதல். அரசியலமைப்பைப் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தால், சாதி மற்றும் மத எல்லைகளைத் தாண்டி சமூகத்தின் அனைத்து பிரிவினரின் நலன்களும் கவனத்தில் கொள்ளப்படுவதை உறுதி செய்யும்.
இந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் துபை, மொரீஷியஸ், சீஷெல்ஸ், அமெரிக்காவிலும் நன்றாக வேலை செய்கின்றனர். உங்கள் திறனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உயர்கல்விக்காக அமெரிக்கர்கள் பிகாருக்கு வரும் எதிர்காலத்தை நான் எதிர்நோக்குகிறேன். மோடியின் நாடகத்தால் திசைதிரும்ப வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
உங்களின் வாக்குகளைப் பெற முடியும் என்றால், அவர் மேடையில் நடனமாடவும் தயாராக இருப்பார்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் - டிரம்ப் விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.