

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அவமதிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தைரியமாக பதிலளிக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ஒவ்வொரு நாட்டிலும் பிரதமர் மோடியை டிரம்ப் அவமதித்து வருகிறார். சமீபத்தில் தென் கொரியாவில்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்துவதற்காக, வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடியை பயமுறுத்தியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.
ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறுகிறார்.
பயப்பட வேண்டாம் மோடி அவர்களே, தைரியமாக பதிலளியுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
தென் கொரியாவில் நடைபெற்ற பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போரை வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நிறுத்தியதாக இன்று மீண்டும் கூறினார். மேலும், போரின்போது 7 புதிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறிய டிரம்ப், பிரதமர் மோடியை நகரத்தைவிட மோசமானவர் என்றும், ஒரு கொலைகாரர் என்றும் விமர்சித்தார்.
இதையும் படிக்க: பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் - டிரம்ப் விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.