

மத்திய பிரதேசத்தில் தோழியின் வீட்டிலிருந்து ரூ. 2 லட்சம், மொபைல் போனை திருடிய பெண் ஆய்வாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜஹாங்கிராபாதில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கல்பனா ரகுவன்ஷி (56) என்பவர், தனது தோழியின் வீட்டிலிருந்து ரூ. 2 லட்சம் ரொக்கத்தையும் மொபைல் போனையும் திருடியதால், அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கல்பனாவும், அவரது தோழியான பிரமிளா திவாரியும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், செப்டம்பர் 24 ஆம் தேதியில் பிரமிளா வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டுக்குள் நுழைந்த கல்பனா, பிரமிளாவின் பணப்பையிருந்து ரூ. 2 லட்சம் பணத்தையும், மொபைல் போனையும் திருடியுள்ளார். அந்தச் சமயத்தில் பிரமிளாவின் மகள், வேறோர் அறையில் படித்துக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கல்பனாவின் கையில் பணத்தை எடுத்துச் செல்வது உறுதியானவுடன், திருடியவற்றைத் திருப்பித் தருமாறு பிரமிளா கேட்டுள்ளார். இருப்பினும், மொபைல் போனை மட்டும் கல்பனா கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, தனது மகளின் பள்ளிக் கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை திருடியதாக, கல்பனா மீது காவல் நிலையத்தில் பிரமிளா புகார் அளித்தார்.
துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த கல்பனா, ஒன்றரை ஆண்டுகளாக பணியில் இல்லாததால், அவர் ஆய்வாளர் பதவிக்கு தரமிறக்கப்பட்ட நிலையில், திருடிய குற்றத்துக்காக அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: சபரிமலை தங்கக் கவச மோசடி: உன்னிகிருஷ்ணன் போற்றி சிறையில் அடைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.