சபரிமலை தங்கக் கவச மோசடி: உன்னிகிருஷ்ணன் போற்றி சிறையில் அடைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போற்றி சிறையில் அடைப்பு
உன்னிகிருஷ்ணன் போற்றி
உன்னிகிருஷ்ணன் போற்றிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போற்றி சிறையில் அடைக்கப்பட்டார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி இன்று ரண்ணி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, எஸ்ஐடி-க்கு எதிராக ஏதேனும் புகார்கள் இருக்கிறதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இருப்பினும், தான் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவச் சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு சிறையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நீதிமன்றம் பதிலளித்தது. மேலும், அவரை மீண்டும் திங்கள்கிழமையில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு சிறைக்கு காவல்துறையினர் மாற்றினர்.

இதையும் படிக்க: முதல்வர் பதவியை மறுத்த முத்துராமலிங்கத் தேவர்: சி.பி. ராதாகிருஷ்ணன்

Summary

Sabarimala gold theft case: Prime accused Unnikrishnan Potty remanded to judicial custody

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com