

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முதல்வராக்க முன்னாள் பிரதமர் நேரு விரும்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுடன் பேசுகையில், ``நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. என்னிடம் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்றாலும், நேதாஜியின் தீவிர ஆதரவாளரான முத்துராமலிங்கத் தேவர் கூறியதால், நானும் அதனை நம்புகிறேன்.
முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கையில் ஒருபோதும் பொய் சொல்லவில்லை என்பதால், அவரது வார்த்தைகளை நான் நம்புகிறேன். அவர், தனது அரசியல் பயணத்திலும் ஆன்மிகப் பாதையைப் பின்பற்றினார், அதுவே அவரது சிறப்பு’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், சுதந்திரப் போராட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் தியாகங்களைப் போற்றிய முன்னாள் பிரதமர் நேரு, முத்துராமலிங்கத் தேவரை முதல்வராக்கவும் விரும்பினார்.
இருப்பினும், முதல்வர் பதவியை மறுத்த முத்துராமலிங்கத் தேவர், நேதாஜிக்கு நீதி கிடைப்பதைத்தான் விரும்புவதாக நேருவிடம் கூறினார்’’ என்று சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பழனிசாமிதான் எங்கள் எதிரி; துரோகத்தை வீழ்த்த இணைந்துள்ளோம்! - ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.