ஏலியன்களின் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்! வெளிநாட்டினர் குறித்து அமெரிக்கா!

வெளிநாட்டினர் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், அமெரிக்க வாழ் இந்தியர்களை பாதிக்கும் என அச்சம்
அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபர்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் பணியாற்ற உரிமம் பெற்றுள்ள வெளிநாட்டினர், அதனை புதுப்பிக்கும் முன்பு, முழுமையான மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படுவர் என்ற புதிய விதிமுறையை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிறப்பித்திருக்கிறது.

இதன் மூலம், ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரின் பணி உரிமம் தானாக புதுப்பிக்கப்படும் விதிமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பணியாற்றும் எண்ணற்ற வெளிநாட்டினரை, குறிப்பாக, அதில் பெரும்பகுதியினராக இருக்கும் இந்தியர்களை வெகுவாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக, அமெரிக்க உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 2025, அக்டோபர் 30 அன்று முதல், தங்கள் பணி உரிம அனுமதியைப் புதுப்பிக்க தாக்கல் செய்யும் வெளிநாட்டினர்களின் (ஏலியன்ஸ்), பணி உரிமம் இனி, தானாக நீட்டிப்பு செய்யப்படாது.

புதிய விதிமுறையில், பணி உரிமம் நீட்டிக்கக் கோரி விண்ணப்பிப்பவர்கள், மறு ஆயவுக்கு உள்படுத்தப்படுவது, நாட்டு மக்கள் நலனுக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையில் ஒரு சில விதிவிலக்குகள் உள்ளதாகவும், நாட்டின் சட்டம் மற்றும் பெடரல் பதிவுத் துறையால் உரிமம் பெற்றவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், இது தேவையான விதிமுறைதான் என்றும், அமெரிக்காவில் பணியாற்றுவது என்பது ஒரு சலகைத்தானே தவிர, உரிமை அல்ல என்று கூறியிருக்கிறார்.

முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், தங்களது பணி அனுமதிக் காலம் முடிந்த பிறகும், 540 நாள்கள் தங்கியிருந்து பணியாற்ற வகை செய்திருந்தது.

பணி அனுமதிக் காலம் முடிவடைவதற்குள், விண்ணப்பிப்பவர்களுக்கு அது தானாகவே புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த வாய்ப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த புதிய விதிமுறை, அமெரிக்காவில் தங்கியப் பணியாற்றும் எண்ணற்ற இந்தியர்களை பாதிக்கும் என்றும், குறிப்பிக எச்-1பி விசா பெற்று பணியாற்றிக் கொண்டு, பல ஆண்டு காலமாக க்ரீன் கார்டு பெற காத்திருப்பவர்களுக்கும், எச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா சென்று பயிலும் மாணவர்களுக்கும், க்ரீன் கார்டு பெற விண்ணப்பித்திருப்பவர்களுக்கும் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் 35 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 13 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Summary

Fears that Indians living in the US will be affected as automatic renewal of work permits for foreigners has been stopped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com