

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலங்கானா அமைச்சரவையில் அமைச்சராக இன்று(அக். 31) பதவியேற்று கொண்டார்.
ராஜ் பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதினுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தெலங்கானா அமைச்சரவையில் முகமது அசாரூதினுக்கு இடம் கிடைத்ததால், அமைச்சர்களின் எண்ணிக்கை 16 ஆனது. இன்னும் 2 பேருக்கு இடம் உள்ளது.
தெலங்கானாவில், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் அசாருதீனை சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்போவதாக தெலங்கானா அமைச்சரவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
தெலங்கானா அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு பிரிதிநிதித்துவம் இல்லை என்று தெரிவித்து, முகமது அசாருதீனை தெலங்கானா அமைச்சரவையில் சேர்க்குமாறு காங்கிரஸ் தலைமைக்கு, தெலங்கானா காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், முகமது அசாருதீன், தெலங்கானா அமைச்சராக இன்று(அக். 31) பதவியேற்று கொண்டார்.
இதையும் படிக்க: அரக்கோணம் - சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.