

அரக்கோணம் - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
அரக்கோணம் அருகே மின்சார ரயிலின் பேண்டா கிளிப் உடைந்ததால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. 30 நிமிட கால தாமதத்தில் புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் புளியமங்கலம் அருகில் செல்லும்போது உயர் அழுத்த மின் கம்பியும், ரயில் என்ஜினுடன் சேர்ந்து உராயும் கம்பியுமான பேண்டா கிளிப் திடீரென உடைந்து சேதம் அடைந்தது. இதனால் ரயிலுக்கு மின்சாரம் கிடைக்காமல் நின்றது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி ரயிலின் பின்பக்கம் உள்ள பேண்டா கிளிப்பை பயன்படுத்தி, தொடர்ந்து ரயிலை இயக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் அந்த ரயில் 30 நிமிட கால தாமதத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது .
இதனால், அந்த வழித்தடத்தின் இயங்கும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நிலையில், அரக்கோணம் - சென்னை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் பணி முடிந்து வீடுகளுக்கு செல்லும் நேரம் என்பதால் பயணிகள் சீரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிக்க: நவ. 3 - 6 வரை வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.