

பஞ்சாப் மாநிலம், லூதியாணாவில் உள்ள ஜக்ரான் நகரில் 25 வயது கபடி வீரர் வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பலியானவர் தேசிய அளவிலான கபடி வீரர் தேஜ்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேரில் கண்ட சாட்சிகளின்படி, மாவட்ட தலைமையகத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள லூதியானா (கிராமப்புற) மூத்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்தது.
தனிப்பட்ட காரணங்களுக்காக நகரத்திற்குச் சென்றிருந்த தேஜ்பால் சிங், ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, பின்னர் பொதுஇடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் கூறினர்.
உள்ளூர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அங்கு வந்தவுடன் இறந்துவிட்டதாகவும் போலீஸார் மேலும் தெரிவித்தனர்.
மூத்த காவல் கண்காணிப்பாளர் அங்கூர் குப்தா கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பிடிக்க போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இது தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாம். சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.