

பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்திற்கு வருகை தந்திருந்த பள்ளி மாணவர்களை புன்முறுவலுடன் ராகுல் காந்தி வரவேற்றார்.
சா்தாா் வல்லப பாய் படேலின் 150வது பிறந்தநாளையொட்டி, பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்திற்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மண்டபத்திற்குள் நுழைந்தவுடன், பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கைதட்டி அவரை வரவேற்றனர்.
அப்போது புன்முறுவலுடன் மாணவர்களுக்கு கைகொடுத்து அவர்களை ராகுல் காந்தி வரவேற்றார். பின்னர் பள்ளி மாணவர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களுடன் உரையாடினார்.
இந்நிகழ்வின்போது மாணவி ஒருவர் நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி என்று ராகுல் காந்தியிடம் கூறினார்.
2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், இந்த மாணவர்கள் முதல் முறையாக வாக்களிக்கக் கூடிய, வாக்காளர்களராக தகுதி பெற்றிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.