பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்

பௌர்ணமி கிரிவல நிகழ்வையொட்டி நவ.4ஆம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

பௌர்ணமி கிரிவல நிகழ்வையொட்டி நவ.4ஆம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இதையொட்டி பக்தர்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் நவம்பர் 4 ஆம் தேதி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, விழுப்புரத்திலிருந்து நவ.4 ஆம் தேதி காலை 10.10 மணிக்கு புறப்படும் 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்குச் சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் அதே நாளில் நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது.

லூதியாணாவில் பட்டப்பகலில் கபடி வீரர் சுட்டுக் கொலை

இந்த ரயிலானது வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Unreserved MEMU Special Trains between Villupuram and Tiruvannamalai will run on 4th Nov 2025 for Girivalam devotees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com