

தலைநகர் தில்லியின் காற்று மாசு விகிதம் 301 - 400 என்ற மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதனால், முடிந்தவர்கள் 6 - 8 வாரங்கள் தில்லியை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று நுரையீரல் துறை மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த ஆண்டின் இறுதி வரை, இன்னும் நிலைமை மோசமடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி-என்சிஆர் பகுதியில், காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், நுரையீரல் தொற்று பாதிப்புகள் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமத்துடன் பலரும் மருத்துவமனைகளை நாடுவது அதிகரித்துள்ளது.
ஒருவேளை, ஏற்கனவே நுரையீரல் பிரச்னை இருப்பவர்களாக இருந்தால், உங்களால் முடிந்தால் டிசம்பர் மாதம் இறுதி வரை தில்லியிலிருந்து வெளியேறிவிடுங்கள் என்று மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவர்கள் அறிவுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காற்று மாசு, தற்காலிக மற்றும் நிரந்தர பிரச்னைகளை நிரையீரலில் ஏற்படுத்திவிடும். மற்ற உடல் உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கும். குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சியையே பாதிக்கும். நாட்டின் மற்றப் பகுதிகளை விடவும், புது தில்லியில் வாழும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை அதிகரித்து வருகிறது.
பொதுவாக, புகையிலை பழக்கம் இருப்பவர்களுக்கு வரும் நுரையீரல் பிரச்னைகள் தற்போது எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர்களுக்கு சர்வ சாதாரணமாக வருகிறது.
முன்பெல்லாம் நுரையீரல் புற்றுநோய், 80 சதவீதம் புகைப்பழக்கம் இருப்பவர்களைத்தான் தாக்கும். ஆனால், தற்போதைய தரவுகள், 40 சதவீத நுரையீரல் புற்றுநோய் பாதித்த நோயாளிகள் வாழ்நாளில் புகைத்ததே இல்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் துயரமான சம்பவம், இளைஞர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதும் அதிகரித்திருப்பதாக மருத்துவ தரவுகள் எச்சரிக்கின்றன.
இதையும் படிக்க... எங்கே செல்கிறது இளம் தலைமுறை? நண்பர்களுடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.