
ஜம்முவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது விக்ரம் சௌக் அருகே உள்ள தாவி பாலத்திலிருந்து ஆற்றங்கரையோரங்களில் ஏற்பட்ட சேதங்களை அவர் ஆய்வு செய்தார். ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, பிற்பகலில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமித் ஷா ஹெலிகாப்டரில் சென்று பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ஜம்மு வந்தடைந்தார்.
மூன்று மாதங்களில் உள்துறை அமைச்சர் ஜம்முவுக்கு வருகை தருவது இது இரண்டாவது முறை. ஆகஸ்ட் 14 முதல் கிஷ்த்வார், கதுவா, ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் மேக வெடிப்புகள், நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஆகஸ்ட் 26-27 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் ஜம்மு மற்றும் பிற சமவெளிகளின் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 26ஆம் தேதி வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் பலியாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.