
ஜார்க்கண்ட் மாநிலத்தில், 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
லதேஹர் மாவட்டத்தில், ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷாத் எனும் அமைப்பில் இயங்கி வந்த 9 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரணடைந்த நக்சல்களில் 5 பேரை ஏற்கெனவே, பாதுகாப்புப் படை அதிகாரிகள் வெகுமதி அறிவித்து தேடி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஏக, எஸ்.எல்.ஆர் ரகங்களைச் சேர்ந்த 12 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, நாராயணப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம், அபூஹ்மத் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த, ஆக.27 ஆம் தேதி, சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இயங்கி வந்த சுமார் 30 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பறவை மோதல்: நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.