அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

தில்லி கலவர வழக்கு: ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி கலவர வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி...

ஷர்ஜீல் இமாம்

Published On :2 செப்டம்பர் 2025, 3:51 pm IST

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த வன்முறையில் குறைந்தபட்சம் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 700 போ் காயமடைந்தனா். இந்தக் கலவரத்தில் மிகப்பெரிய சதி நடந்தது தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபா்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இவர்களின் ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கெளர் அமர்வு விசாரித்த நிலையில், தில்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”நாட்டுக்கு எதிராக குற்றம் செய்தால் விசாரணை முடியும் வரை சிறையில் இருப்பதே நல்லது” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அனைவரின் ஜாமீன் மனுக்களையும் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல், தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட தஸ்லீம் அகமது என்பவரின் ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணிய பிரசாத், ஹரீஷ் வைத்தியநாதன் சங்கா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்த நிலையில், அவரின் ஜாமீனும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதாகியுள்ள அனைவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Summary

Delhi riots case: Bail pleas of 9 people including Sharjeel Imam, Umar Khalid rejected

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.