
ரியல்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 15 டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
ரூ. 20 ஆயிரம் விலையில் 7000mAh பேட்டரி திறனுடன் 50MP கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள நடுத்தர வர்க்கப் பயனர்களைக் கவரும் வகையில் நிறைவான அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களைக் காணலாம்.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் மூன்று வகையான வேரியன்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
8GB+128GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,999
8GB+256GB, நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 22,999
12GB+256GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 24,999
இந்த மூன்றுக்கும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. சலுகையின்படி, 8GB+128GB ஸ்மார்ட்போன் விலை ரூ. 18,999, 8GB+256GB ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,999 மற்றும் 12GB+256GB ஸ்மார்ட்போன் விலை ரூ. 22,999.
மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் 5 ஜி புராசஸர் கொண்டது.
6.57 அங்குல அமோலிட் திரை உடையது. திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 4000 nits திறன் கொண்டது. 2,160Hz திறன் வரை திரையின் வெளிச்சத்தை குறைத்துக்கொள்லலாம்.
50MP முதன்மை கேமராவும் 4K விடியோ பதிவு திறனையும் கொண்டது. முன்பக்கமும் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
7000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. அதிவேக சார்ஜரும் உடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம், 25.3 மணிநேரம் யூடியூப் பார்க்கலாம். 128 மணிநேரம் பாடல்கள் கேட்கலாம். 13 மணிநேரம் கேம் விளையாடலாம் என ரியல்மி தெரிவிக்கிறது.
7.79மி.மீ தடிமனும், 181 கிராம் எடையும் கொண்டது.
நீலம், டைட்டானியம், சில்வர் வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.
நீர் மற்றும் தூசி புகா தன்மையுடன் IP69 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.