
பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை ஜிஎஸ்டி கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் நிரூபிக்கின்றன என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு தனது பிம்பத்தை உலகிற்கு வெளிப்படுத்திய விதம் குறிப்பிடத்தக்கது. பிரதமர் அனைத்துத் துறைகளிலும் சமமான அக்கறை எடுத்துக்கொள்கிறார். உலகளாவிய கொந்தளிப்பின் தற்போதைய சூழலில் கூட, அவர் தனது நாட்டு மக்கள், தொழில்முனைவோர் மற்றும் ஏழ்மையானவர்களைக் கவனித்துக்கொள்கிறார்.
ரொட்டி முதல் ஹேர் ஆயில், ஐஸ்கிரீம்கள் மற்றும் டிவிக்கள் வரை அனைத்து பொதுவான பயன்பாட்டுப் பொருள்களின் விலையும் குறைக்கப்படும் என்றும் அதே நேரத்தில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரி விகிதம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்றும் புதன்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது.
செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் வகையில், 5 சதவீதம் மற்றும் 18 சதவீதமாக வரம்புகளை நிர்ணயிக்க ஒப்புதல் அளித்தது. அரசு உள்நாட்டு செலவினங்களை அதிகரிக்கவும், அமெரிக்க வரிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கவும் முயல்வதால், கிட்டத்தட்ட அனைத்து தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருள்களும் விகிதக் குறைப்பு செய்யப்படும்.
மோடி தனது சுதந்திர தின உரையில் மக்களுக்கு விரைவில் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவித்தார். அவர் சொன்னது போல், அந்த நன்மைகள் (ஜிஎஸ்டி தளர்வுகள்) நவராத்திரியிலிருந்து (செப்டம்பர் 22) நாம் கிடைக்கப்பெறுவோம்.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அன்றாட வாழ்வில் அவற்றைப் பயன்படுத்தும் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவர் கூறினார்.
ஏழைகள், விவசாயிகள், பொதுமக்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கும் என்று மத்தியப் பிரதேச அவைத்தலைவர் நரேந்திர சிங் தோமரும் மத்திய அரசின் முடிவைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.