ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார்கள், பைக்குகளின் விலை குறைவது பற்றி...
tata punch
டாடா கோப்புப்படம்
Published on
Updated on
3 min read

ஜிஎஸ்டி வரி குறைப்பினால் வாகனங்களின் விலை குறிப்பாக கார்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த செப். 3 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

குறிப்பாக மின்னணு பொருள்கள், வாகனங்கள் மீதான வரி குறைப்பு மக்களிடையே நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1,200சிசி-க்கு உள்பட்ட பெட்ரோல் கார்கள், சிஎன்ஜி கார்கள் மற்றும் 1500 சிசி-க்கு உள்பட்ட டீசல் கார்களுக்கு மற்றும் மூன்று சக்கர, இரு சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 28% லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜிஎஸ்டி குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவிருப்பதாக டாடா நிறுவனம் கூறியுள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பு மூலமாக டாடா மோட்டார்ஸின் டியாகோ மாடல் கார்களின் விலைகள் ரூ.75,000 வரை குறையும். மேலும் 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யுவி நெக்ஸானின் விலைகள் அதிகபட்சமாக ரூ.1,55,000 வரை குறையும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ANI

டாடா நிறுவன கார்களின் விலை எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து உத்தேசமாக எவ்வளவு குறையும்?

டியாகோ - ரூ. 75,000 வரை

டிகோர் - ரூ. 80,000 வரை

அல்ட்ரோஸ் - ரூ. 1,10,000 வரை

பன்ச் - ரூ. 85,000 வரை

நெக்ஸான் - ரூ. 1,55,000 வரை

கர்வ் - ரூ. 65,000 வரை

ஹாரியர் - ரூ. 1,40,000 வரை

சஃபாரி - ரூ. 1,45,000 வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

அதேபோல மாருதி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார்களின் விலை உத்தேசமாக எவ்வளவு குறையும்?

மாருதி அல்டோ தற்போதைய எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 4.2 லட்சம்; இதிலிருந்து ரூ. 35,000 குறையும்.

மாருதி வேகன் ஆர் விலை ரூ. 5.8 லட்சம் - ரூ. 90,000 குறையலாம்.

மாருதி ஸ்விப்ட் விலை ரூ. 6.5 லட்சம் - ஒரு லட்சம் ரூபாய் வரை குறையும்

மாருதி டிசையர் விலை ரூ. 6.8 லட்சம் - ஒரு லட்சம் ரூபாய் வரை குறையும்

விடபிள்யூ விர்ட்டஸ் விலை ரூ. 11.5 லட்சம் - ரூ. 1.1 லட்சம் குறையும்

மாருதி ப்ரெஸ்ஸா விலை ரூ. 8.7 லட்சம் - ரூ. 90,000 வரை குறையும்

ஹூண்டாய் கிரெட்டா விலை ரூ. 11.1 லட்சம் - ரூ. 1.1 லட்சம் வரை குறையும்.

ANI

எம்&எம் எக்ஸ்யுவி 700 விலை ரூ. 14.5 லட்சம் - இதிலிருந்து ரூ. 1.9 லட்சம் வரை குறையும்

மாருதி எர்டிகாவின் விலை ரூ. 9.1 லட்சம் - ரூ. 90,000 வரை குறையலாம்.

டொயோட்டா இன்னோவா விலை ரூ. 20 லட்சம் - ரூ. 2.6 லட்சம் வரை குறையும்.

பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் விலை ரூ. 76.5 லட்சம் - ரூ. 4 லட்சம் வரை குறையும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 விலை ரூ. 1.4 கோடி - ரூ. 9 லட்சம் வரை குறையும்

ஹூண்டாய் ஐ10 விலை ரூ. 5.98 லட்சம் - ரூ. 47,000 வரை குறையும்.

ரெனால்ட் க்விட் விலை ரூ. 40,000 வரை குறைய வாய்ப்புள்ளது.

தார், ஸ்கார்பியோ உள்ளிட்ட கார்களின் விலை கணிசமாக குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் பைக்குகளின் விலையும் ஆயிரக்கணக்கில் குறைய வாய்ப்புள்ளது.

ஹோண்டா ஆக்டிவா எக்ஸ் ஷோ ரூம் விலை ரூ. 81,000 - ரூ. 7,000 வரை குறையும்.

டிவிஎஸ் என்டார்க் விலை ரூ. 87,900 - ரூ. 7500 வரை குறையும்.

ஹோண்டா ஷைன் 125 விலை ரூ. 90,000 - ரூ. 7,700 வரை குறையும்.

பஜாஜ் பல்சர்150 விலை ரூ. 1.1 லட்சம் - ரூ. 9,500 வரை குறைய வாய்ப்புள்ளது.

புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் வருகிற செப். 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் செப். 21-க்குப் பிறகு ஆட்டோ மொபைல் சாதனங்கள் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் 1500 சிசி-க்கு அதிகமான கார்கள், 4 மீட்டர் நீளத்திற்கு அதிகமுள்ள உயர் ரக கார்களுக்குக்கு வரி 40% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்யுவி, எம்யுவி, எம்பிவி, எக்ஸ்யுவி கார்கள் இதில் அடங்கும். மின்சார வாகனங்களுக்கு முந்தைய 5% வரியே தொடர்கிறது.

Summary

Experts say that the GST tax cut is likely to significantly reduce the prices of bikes and cars.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com