Jairam Ramesh
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மட்டும் தானா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
Published on

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மட்டும் தானா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாஜக ஆளும் குஜராத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்கள் அனைத்து உள்ளாட்சித் தோ்தல்களிலும் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்கள் பஞ்சாயத்து தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அஸ்ஸாமில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்கள் எந்தவொரு மாநில அரசுப் பணியிலும் சேர முடியாது. ஆனால், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தனது சமீபத்திய பேச்சில், அனைத்து இந்திய தம்பதிகளும் நாம் இருவா், நமக்கு மூவா் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

அந்த வகையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை எல்லாம் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மட்டும்தானா? இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்களை பாஜக அரசு வஞ்சிக்கிா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

X
Dinamani
www.dinamani.com