உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

உடல் நலனைப் பேணுவதில் தனக்கு முன்னோடியாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக நடிகர் மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார்.
உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்
Published on
Updated on
1 min read

உடல் நலனைப் பேணுவதில் தனக்கு முன்னோடியாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக நடிகர் மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார்.

தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிலிந்த் சோமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உடல் ஆரோக்கியம் குறித்து அவர் பேசியதாவது,

உடல் நலன் என்பது வாழ்வின் அனைத்துவிதமான அழுத்தங்களிலும் துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கும் மனநிலையாகும்.

நீங்கள் செய்ய வேண்டியதை உங்களால் செய்ய முடிந்தால், அதுதான் உண்மையான உடற்தகுதியின் அளவுகோல். பைசெப்ஸ் அல்லது சிக்ஸ் பேக் வைத்து வயிற்றுப் பகுதியை உருவாக்குவது மட்டுமே உடற்தகுதி அல்ல.

நாடு முழுவதும் 10 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள ஒருங்கிணைந்துள்ளனர். இது தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் இத்தனை நபர்கள் உடல்நலனை பேணுவதற்காக ஒன்றுகூடுவது இதுவே முதல்முறை.

இதுபோன்ற அதிக முன்னெடுப்புகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒருமுறை செய்துவிட்டு விட்டுவிடக்கூடாது. இதனைத் தொடர வேண்டும். உடல் நலனைப் பேணுவதில் பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக உள்ளார். நான் அவரின் ரசிகன் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அவரை முன்னுதாரணமாகக் கருதுகிறேன். தற்போது, போதைப் பொருள்களுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி செப். 21ஆம் தேதி நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 இடங்களில் 10,000 - 15,000 நபர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். அதாவது, ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்று நடக்கவுள்ளனர். இது நாட்டிலேயே மிகப்பெரிய மற்றும் பிரமாண்ட நடைப்பயிற்சி என்ற சாதனையை படைக்கவுள்ளது.

இதையும் படிக்க |பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

Summary

I am an admirer of PM Modi’s fitness: Milind Soman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com